சிறப்பு பட்டிமன்றம்
சிறப்பு பட்டிமன்றம்
மனநிறைவான வாழ்க்கை என்பது
அந்தக் காலத்திலா? இந்தக் காலத்திலா?
நடுவர் : ராமேஸ்வரம் ராமன்
SNMV கலை அறிவியல் கல்லூரி, சிகரம் அறக்கட்டளை,
இலவச கண் சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு பொதுமக்கள் பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கண்
சிகிச்சை
முகாம்
சிகரம்
பவுண்டேசன் தலைவர் சிகரம் விஸ்வபாரதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவை மாவட்ட பார்வை தடுப்புச்சங்கம், சிகரம் பவுண்டேசன், பாப்பம்பட்டி ஊராட்சி, SNMV கலை அறிவியல் கல்லூரி, குளோபல் குரூப் மற்றும்
சங்கரா கண் மருத்துவமனை சார்பில் வருகிற 01-10-2023 அன்று ஞாயிறு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, கோவை, பாப்பம்பட்டி நூலகம் வளாகத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் கண்புரை உள்ள நோயாளிகள் முகாம் தினத்தன்றே கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
மேலும் அவர்களுக்கு உள் விழி லென்ஸ் அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசம்.
அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு ஒரு மாதம் கழித்து மறு பரிசோதனை இலவசமாக செய்யப்படும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண் விழித்திரையில் முன் அறிகுறி இல்லாமலேயே பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
கண் நீர் அழுத்த நோய் 40 வயதுக்கு மேல் எந்தவித அறிகுறியும் இல்லாமல் கண் பார்வையை பாதிக்கும். மாறுகண், பிறவி கண் நீர் ழுத்த நோய் மற்றும் மாலைக்கண் நோய் உள்ள குழந்தைகளை அழைத்து வந்து கண் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
கிட்டப்பார்வை, தூரப்பார்வை வெள்ளெழுத்து உள்ளவர்களுக்கு கண் கண்ணாடிகள் முகாம் நடக்கும் இடத்திலேயே கிடைக்கும். முகாமிலேயே அவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
முகாம்
தொடர்புக்கு : 9894544778, 90035 95595