பாப்பம்பட்டியில் ஜூலை 19 அன்று மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்
கோவை, ஜூலை 2026:
பொதுமக்களின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் சிகரம் பவுண்டேஷன், சங்கரா கண் மருத்துவமனை,
மகிழ் அகாடமி, பாப்பம்பட்டி ஊராட்சி மற்றும் கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை
முகாமை நடத்துகின்றன.
இம்முகாம் 2026 ஜூலை 19ஆம் தேதி
(ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00
மணி முதல் மதியம் 1.00 மணி வரை, பாப்பம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த முகாமில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை
அனைவருக்கும் கண் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் இலவச கண் பரிசோதனை மற்றும்
மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.
மேலும், கண்புரை உள்ளிட்ட அறுவை சிகிச்சைக்கு தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்பட்டால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை,
விழிலென்ஸ் (IOL), உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி ஆகிய அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண் நீர் அழுத்த நோய் (Glaucoma)
பரிசோதனை
சிறப்பு முறையில் மேற்கொள்ளப்படும். மாறுகண், பிறவிக்கண் குறைபாடு,
மாலைக்கண் நோய்
உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்கும் சிறப்பு பரிசோதனை செய்யப்படும்.
கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் வெள்ளெழுத்து குறைபாடு
உள்ளவர்களுக்கு தேவையான கண் கண்ணாடிகள் முகாம் நடைபெறும் இடத்திலேயே வழங்கப்படும்.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஆஸ்துமா,
இதய நோய்
அல்லது பிற உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள், அருகிலுள்ள மருத்துவரிடம்
பரிசோதனை செய்து தகுதிச் சான்றிதழ் மற்றும் பயன்படுத்தும் மருந்துகளுடன் முகாமில்
கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த முகாமில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்று இலவச
மருத்துவ சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு
விடுத்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு:
📞 90035 95595, 98945
44778











