:::: MENU ::::
  • SIGARAM SPEECH COMPETITION

  • SIGARAM FOUNDATION

  • EDUCATION

  • EDUCATION

  • EMPOWER

  • LET'S MAKE A DIFFERENCE

கல்லூரியில் சேரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவனத்திற்கு

சிகரம் அறக்கட்டளையின் பெயரை சில தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் தவறாக பயன்படுத்தி, மாணவர்களையும் பெற்றோர்களையும் ஏமாற்ற முயற்சித்து வருவதாக எங்களது கவனத்திற்கு வந்துள்ளது.

குறிப்பாக, "பல்வேறு கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்துத் தருகிறோம்" என்று கூறி பணம் பெற்றுக்கொள்வது, மேலும் மாணவர்களிடமிருந்து அசல் (Original) கல்விச் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு பின்னர் அவற்றை திருப்பித் தர மறுப்பது போன்ற சம்பவங்கள் குறித்து எங்களுக்கு பல்வேறு புகார்கள் கிடைத்துள்ளன.

இதனை முன்னிட்டு பொதுமக்களுக்கு பின்வரும் விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறோம்:

  • சிகரம் அறக்கட்டளை கல்வி உதவித்தொகை (Scholarship) வழங்கும் பணியை மட்டுமே மேற்கொண்டு வருகிறது.
  • எந்தக் கல்லூரியிலும் மாணவர்களை சேர்த்துத் தரும் சேவையை நாங்கள் மேற்கொள்வதில்லை.
  • கல்லூரி சேர்க்கைக்காக எந்தவித கட்டணமும் நாங்கள் வசூலிப்பதில்லை.
  • எந்த மாணவரிடமிருந்தும் அசல் கல்விச் சான்றிதழ்களை நாங்கள் பெற்றுக்கொள்வதில்லை.

எனவே, மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தாங்கள் விரும்பும் கல்லூரியில் சேரும்போது, அந்தக் கல்லூரி நிர்வாகத்திடம் மட்டுமே தேவையான அசல் கல்விச் சான்றிதழ்களை ஒப்படைக்கவும்.

மேலும், கல்லூரி சேர்க்கை என்ற பெயரில் எந்தவொரு தனிநபரிடமோ அல்லது அமைப்பு / அறக்கட்டளையிடமோ பணமோ அல்லது அசல் கல்விச் சான்றிதழ்களையோ வழங்க வேண்டாம் என்று பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

சிகரம் அறக்கட்டளையின் ஒரே அதிகாரப்பூர்வ அலுவலகம்

சிகரம் அறக்கட்டளை
எண்: 1, மகிழகம்,
பாப்பம்பட்டி சாலை,
கண்ணம்பாளையம்,
கோயம்புத்தூர் – 641 402.

கண்ணம்பாளையம், கோயம்புத்தூரில் மட்டுமே எங்களது அதிகாரப்பூர்வ அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதைத் தவிர வேறு எந்த இடத்திலும் எங்களது கிளை அலுவலகங்கள் அல்லது பிரதிநிதி அலுவலகங்கள் இல்லை என்பதை பொதுமக்களின் கவனத்திற்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, இதுபோன்ற மோசடி முயற்சிகளுக்கு இடமளிக்காமல் பாதுகாப்பாக செயல்படுமாறு மீண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

சிகரம் விஸ்வநாதன்
நிறுவனர் & தலைவர்
சிகரம் அறக்கட்டளை

📞 +91 98945 44778

பாப்பம்பட்டியில் ஜூலை 19 அன்று மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்



கோவை, ஜூலை 2026:

பொதுமக்களின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் சிகரம் பவுண்டேஷன், சங்கரா கண் மருத்துவமனை, மகிழ் அகாடமி, பாப்பம்பட்டி ஊராட்சி மற்றும் கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்துகின்றன.

இம்முகாம் 2026 ஜூலை 19ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை, பாப்பம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்த முகாமில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.

மேலும், கண்புரை உள்ளிட்ட அறுவை சிகிச்சைக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை, விழிலென்ஸ் (IOL), உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி ஆகிய அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண் நீர் அழுத்த நோய் (Glaucoma) பரிசோதனை சிறப்பு முறையில் மேற்கொள்ளப்படும். மாறுகண், பிறவிக்கண் குறைபாடு, மாலைக்கண் நோய் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்கும் சிறப்பு பரிசோதனை செய்யப்படும்.

கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் வெள்ளெழுத்து குறைபாடு உள்ளவர்களுக்கு தேவையான கண் கண்ணாடிகள் முகாம் நடைபெறும் இடத்திலேயே வழங்கப்படும்.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஆஸ்துமா, இதய நோய் அல்லது பிற உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள், அருகிலுள்ள மருத்துவரிடம் பரிசோதனை செய்து தகுதிச் சான்றிதழ் மற்றும் பயன்படுத்தும் மருந்துகளுடன் முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த முகாமில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்று இலவச மருத்துவ சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு:

📞 90035 95595, 98945 44778

"அனைவரும் வருக... பயன்பெறுக