:::: MENU ::::
  • SIGARAM SPEECH COMPETITION

  • SIGARAM FOUNDATION

  • EDUCATION

  • EDUCATION

  • EMPOWER

  • LET'S MAKE A DIFFERENCE

இலவச கண் சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு பொதுமக்கள் பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 


கண் சிகிச்சை முகாம்

சிகரம் பவுண்டேசன் தலைவர் சிகரம் விஸ்வபாரதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவை மாவட்ட பார்வை தடுப்புச்சங்கம், சிகரம் பவுண்டேசன், பாப்பம்பட்டி ஊராட்சி, SNMV கலை அறிவியல் கல்லூரி, குளோபல் குரூப் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் வருகிற 01-10-2023 அன்று ஞாயிறு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, கோவை,  பாப்பம்பட்டி நூலகம் வளாகத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.

 

இந்த முகாமில் கண்புரை உள்ள நோயாளிகள் முகாம் தினத்தன்றே கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

 

மேலும் அவர்களுக்கு உள் விழி லென்ஸ் அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசம்.

அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு ஒரு மாதம் கழித்து மறு பரிசோதனை இலவசமாக செய்யப்படும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண் விழித்திரையில் முன் அறிகுறி இல்லாமலேயே பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

கண் நீர் அழுத்த நோய் 40 வயதுக்கு மேல் எந்தவித அறிகுறியும் இல்லாமல் கண் பார்வையை பாதிக்கும். மாறுகண், பிறவி கண் நீர் ழுத்த நோய் மற்றும் மாலைக்கண் நோய் உள்ள குழந்தைகளை அழைத்து வந்து கண் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

கிட்டப்பார்வை, தூரப்பார்வை வெள்ளெழுத்து உள்ளவர்களுக்கு கண் கண்ணாடிகள் முகாம் நடக்கும் இடத்திலேயே கிடைக்கும். முகாமிலேயே அவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.



உயர் ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், ஆஸ்துமா, இதய நோய் அல்லது உடம்பில் வேறு ஏதேனும் தொந்தரவு இருந்தால் அருகில் உள்ள பொது மருத்துவரிடம் பரிசோதனை செய்து கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொள்ள தகுதி சான்றிதழ் மற்றும் மருந்து மாத்திரைகளுடன் முகாமுக்கு வர வேண்டும்.

 

முகாம் தொடர்புக்கு : 9894544778, 90035 95595

 

சிகரம் பேச்சுப் போட்டி

இனி திக்கெட்டும் ஒலிக்கட்டும் உங்கள் குரல்



சிகரம் பவுண்டேசன் நடத்தும்

சிகரம் பேச்சுப் போட்டி

மாநில அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி

தலைப்புகள் :- 

1.சிகரம் தொடு! ()   

2.வையத் தலைமைகொள்!

(ஏதேனும் ஒரு தலைப்பு மட்டும் )

காணொளியை (Speech Video) படுக்கவாட்டில் (Landscape) வைத்து எடுக்க வேண்டும்.

காணொளியை அனுப்பும்போது கூடவே தன்னுடைய பெயர், புகைப்படம், Whatsapp எண், முகவரியை சேர்த்து அனுப்பவும்.

முன்பதிவுக்கு : https://bit.ly/sigarampechupotti

காணொளி அனுப்ப வேண்டிய டெலிகிராம்  எண்  : +91 98435 75557 

காணொளி அனுப்ப கடைசி நாள்: 30-08-2023

காணொளிக்கான  அதிகபட்ச நேரம்  3 நிமிடங்கள் 

வயது வரம்பில்லை

தகுதி சுற்றுக்கு நுழைவுக்கட்டணம் இல்லை

முடிவுகள் : பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும்.

For Registration : https://bit.ly/sigarampechupotti

For More details Call / Whatsapp : 98435 75557

இந்த தகுதி சுற்றில் தோ்வு செய்யப்பட்டவர்களுக்கு இறுதிசுற்றுக்கு கலந்து கொள்ள தகவல் பின்னர் தரப்படும்.

கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கேற்பு இ-சான்றிதழ் வழங்கப்படும்.

வெற்றி பெறும் அனைவருக்கும் ரொக்க பண முடிப்பு, பரிசுக்கோப்பை கேடயம், பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்.

கலந்து கொண்டு அசத்துங்கள்...

இனி திக்கெட்டும் ஒலிக்கட்டும்

உங்கள் குரல்...

-

தலைவர்

சிகரம் பேச்சுப் போட்டி குழு

சிகரம் பவுண்டேசன்

98435 75557

More details : https://bit.ly/sigarampechu

sigarampechupotti@gmail.com                                                                                     www.sigaram.in